அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதேன்னு மல்லுகட்டும் வயிறை பொறுமை பொறுமைன்னு அதட்டியபடியே இறங்கினேன்.
இடம்: சேலம் புதிய பேருந்து நிலையம்.
எங்கே தேடுவேன்?முருகா ,நல்ல உணவகத்தை என புலம்பி நிமிர்ந்த போது, யாமிருக்க பயமேன் என்று அபயம்யளித்து எதிரில் வரவேற்றது சரவணபவன் உணவகம்.
தேடினேன் வந்தது.நாடினேன் தந்தது நல்ல உணவை சரவணபவன். சுத்தமான சுழலில், சுவையான சுகாதாரமான உணவு, வாடிக்கையாளரை உபசரிக்கும் பாங்கு என மனசுக்கும், வயிற்றுக்கும் இதம் தந்தது சரவணபவன். சரவணபவனை சந்தித்த வேளைகள் தொடர்ந்த போது, அடடா எத்தனை உணவுகள், எல்லாமே சுவை கொண்டாட்டம்.
மல்லிகைப்பூ இட்லி, மணக்கும் சாம்பார், விதவிதமான விறுவிறு சட்னிகள், புது பெண்ணாய் பூரி மசால், பட்டு சப்பாத்தி, கொஞ்சும் குருமா, இளமை ததும்பும் முறுகல் ரவா தோசை, சல் என்று நாவில் இறங்கும் சாம்பார் வடை, வழுக்கி விழும் நெய் பொங்கல், ஆட்டம் போடும் அடை அவியல், இடிக்காத இடியாப்பம், ஆப்பம், சம்மரில் ராகிகூழ், தயிர் சேமியா, வித்யாசமாய் ஓட்ஸ் உப்புமா, ஐந்து வகை தோசை, நித்தமும் கமகம, சரி, கம கமன்னு சங்கீதம் பாட வைக்கும் காபியும் உண்டு. சில்லுனு பழசாறும் உண்டு.
சரவணபவன் வெற்றிக்கு காரணம் அதன் நிறுவனர் உழைப்பால் உயர்ந்த மனிதர், திரு வி .சி.சிவராமன் அவர்கள். அண்ணல் காந்தியடிகள் சொன்னது போல வாடிக்கையாளர்களே தெய்வம்.அவர்தம் சேவையை திருப்பணி என்ற மனப்பாங்கு உடையவர். பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்பதற்கேற்ப உயர்விலும் எளிமை மிக்கவர்.
தன் தொழில் அக்கறையால், கடின வெற்றியை தக்க வைத்து, தொடர் வெற்றிகளின் சாதனையாய் சரவணாவின் பல்வேறு கிளைகளை பரப்பியுள்ளார்.
நித்தம் ஒரு சுவைக்கும், மதிய உணவுக்கும் சரவணா கிளாசிக், ஆசைப்படுகிற உணவுக்கு சின்ன சின்ன ஆசை, நா ஊற வைக்கும் கிரீமி கேக் ஷாப், பேக்கரி, குளுகுளு ஏற்காட்டில் சுடசுட சரவணா பாஸ்ட் புட் என பல தொடர் கிளைகள் உண்டு.
மாங்கனி நகருக்கும் வருகை தரும் மக்களே! சுற்றுலா மட்டுமல்ல சுவையான உணவு தரும் சரவணாவில் உண்டு மகிழுங்கள். சேலத்தின் சிறப்புகளில் சரவணா உணவகமும் கூட.

Aunty beautifully written!
ReplyDeleteI took half an hour to read (My Tamil is bad) but enjoyed it so much! Looking forward to more from you :-)
Keerths, you should start learning tamil atleast to read and comment on my blogs:) May be I can help you! Try reading my lullaby for Harshi with help of Vidya:) Looking forward for your comments:)
DeleteSuper Aunty...
ReplyDeleteAnaithu unavu vaigaiyaiyum rusi paartha magizhchi, neengal ezhudhiyadhai padithadhil kedaithadhu :-)
Thanks Bhavani:)
ReplyDeleteTry checking my "Thalaattu for Harshi" and share your views as mom on that Bhavani...
Delete