குழந்தைக்கு உடல்நலக் குறைவு என்றால் காரணம் புரியாது , குழந்தை மருத்துவர் கிட்ட ஓடுவோம்.
ஒருவழியாக உள்ளே போயி மருத்துவரை பார்த்து, பக்கமாய் ஆன்டி-பயோடிக் எழுதி வாங்கி, மருத்துவர் கட்டணமாய் சில நூறு கொடுத்து வருவோம். இது தான் குழந்தை உடல் நலம் குறித்த மருத்துவ விசாரணை.
காது கொடுத்து நாம் சொல்வதை கேக்க அவருக்கும் பொறுமை நேரமில்லை. நமக்கும் பொறுமையில்லை.
ஆனா எங்க குழந்தை மருத்துவர் மணிவண்ணன் வழியே தனிவழி. ஏற்றத் தாழ்வில்லாமல் எல்லா குழந்தைகளையும் பரிசோதிப்பது, குழந்தை எடை கூடவில்லயேன்னு கவலைப்படுவது, உடனடி நிவாரணம்னு ஆன்டி-பயோடிக் மருந்துகளை அள்ளி விடாமல், மருந்துகளை குறைப்பதுன்னு சொந்த குழந்தைகள் மாதிரி பாவிப்பார்.
குழந்தைக்கு குறை ஒன்றும் இல்லை என்று நம்மளை திருப்திப்படுத்துவார். குழந்தை உணவு நிறுவனத்துக்கும், மருந்து நிறுவனத்துக்கும் லாபம் கூட மாட்டார்.
குழந்தை வளரத் தேவையான வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளான பொட்டுக்கடலை, பச்சைப் பயறு, இராகி மாவு, நவதானியக் கஞ்சிகள்னு வீட்டிலயே, சுத்தமாக தயாரித்து கொடுக்க சொல்லுவார். அம்மா மாதிரி அதன் தயாரிப்பு முறைகளையும் சொல்லுவார்.
பார்க்கும் போதெல்லாம் கட்டண வசூல் இல்லை. பரிசோதனை மருத்துவத்திற்கும் மட்டுமே. இதை தப்பா புரிஞ்சிட்டு, ஓசிக்கு யாரும் போயிடாதிங்க. அவருக்கும் மணியான குடும்பம் உண்டு.
மருத்துவம் வியாபாரமாகிப் போன இந்த நாளில், மருத்துவ உறுதிமொழியை, தக்க வைத்து சேவை புரிபவர் மணிவண்ணன்.
மருத்துவ உலகின் எங்க ஊர் அதிசயம் இவர். மணியான மருத்துவரே, வாழ்த்த வயதிருப்பதால் மருத்துவ சேவை தொடரட்டும் என வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment